DEPARTMENT OF TAMIL
திராவிடமொழிக் குடும்பத்தின் மூலமொழி தமிழ். திராவிடக் குடும்பத்தின் முதன்மையான மொழி, மூத்த மொழி, திராவிட மொழிகளின் தாய்மொழி நம் செம்மொழியாம் தமிழ். இந்த மொழிக்கூட்டத்தில் மொத்தம் 26 மொழிகள் உள்ளன. அத்தனைக்கும் மூல மொழியாக நம் தாய்மொழி தமிழ் இருப்பது பெருமைக்குரிய ஒன்று.
இலக்கண இலக்கிய வளமுடைய மொழிகள் பலவாக உள்ளன. இவற்றுள் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றுத் தொன்மையுடைய மொழிகள் சிலவே. அவை: தமிழ், சீனம், சமஸ்கிருதம், இலத்தீன், ஈப்ரூ, கிரேக்கம். இவற்றுள் ஈப்ரூவும் இலத்தீனும் வழக்கிலிருந்து நீங்கிவிட்டன. இன்றும் நிலைத்து நிற்கும் மொழிகளில் தமிழ் முக்கியமான இடம் வகிக்கிறது.
ஒரு மொழி நிலைத்து நிற்க, பழமையும் வளமையும் மட்டும் போதாது. பேச்சு மொழியாக, எழுத்து மொழியாக, ஆட்சி மொழியாக, நீதிமன்ற மொழியாக அந்த மொழி நிலைபெற வேண்டும்.
தமிழ் மொழியின் நோக்கங்கள்
கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் குறைந்த செலவில் படித்து விரைவில் வேலை வாய்ப்பு பெறக்கூடிய துறைகளில் ஒன்று தமிழ்த்துறை. தமிழில் பட்டம் பயில்வது மொழி வளர்ச்சிக்கு பெரும் உறுதுணையாகும். இதனுடன் கல்வியியல் முதுகலை படிப்புகளைச் சேர்ந்தால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
பேச்சுக்கலை, எழுத்துக்கலை மேம்படும். சிறந்த பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்களை உருவாக்குவதில் தமிழ்த்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. “தீட்டிவிடும் கல்வி போட்டியிடும் உள்ளம்” என்பதே எங்களின் கல்விக் கொள்கை.
பல்கலைக்கழக தேர்வுகளில் சிறந்த தேர்ச்சி பெற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு இலக்கியப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வகையில் மாணவர்களுக்கு போதிய வசதிகள் செய்யப்படுகின்றன.
Eligibility Criteria
Programme | Eligibility |
---|---|
B.A. Tamil | A pass in 10+2 with Tamil as a Language Paper |
தொடக்கத்திலிருந்தே ஆய்வுச் சூழலை அறிமுகப்படுத்தும் வகையில் ஒவ்வொரு பருவத்திலும் பயிலரங்கங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. இது மாணவர்களுக்கு ஆய்வுக் கட்டுரை எழுதும் திறனை வளர்க்கிறது.
“பண்புடையார்பட்டுண்டு உலகம், அதுவின்றேல் மண்புக்குமாய்வதுமண்.”
உலகமே உள்ளங்கையில் உழல்கிற இன்றைய காலத்தில் உலகத் தொடர்பு முக்கியம். ஆண்டுதோறும் பேச்சுப் போட்டி, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களின் திறன்கள் மேம்படுத்தப்படுகின்றன. வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆண்டுவிழாவில் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இத்துறையின் குறிக்கோள்: ஒவ்வொரு மாணவரையும் “பண்புமிகுந்த படிப்பாளி, படிப்பு இயைந்த படைப்பாளி, படைப்பு ஆற்றலுள்ள நாட்டுப்பற்றாளர்” ஆக்குவதே.
மாணவர்களுக்காக தனித்தனி நூலகம் உள்ளது. தமிழ்த்துறை நூலகத்தில் 3000+ நூல்கள் உள்ளன. வகுப்பறைகள் அரசு விதிமுறைக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டிற்கும் தனி வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.